நெல்லையில் அபாயகரமான வகையில் நிலஅதிர்வு எதுவும் பதிவாகவில்லை - மாவட்ட நிர்வாகம்

நெல்லையில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் நிலஅதிர்வு எதுவும் பதிவாகவில்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
நெல்லையில் அபாயகரமான வகையில் நிலஅதிர்வு எதுவும் பதிவாகவில்லை - மாவட்ட நிர்வாகம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

மேலும் அம்பாசமுத்திரம் பகுதியில் உணரப்பட்ட நிலஅதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மற்றும் இந்திய தேசிய கடலியல் தகவல் சேவைகளுக்கான மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அபாயகரமான வகையில் நிலஅதிர்வு எதுவும் பதிவாகவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நிலஅதிர்வு எனவும், இது போன்ற அதிர்வுகள் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஏற்படும் என்பதால் இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com