காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 45 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
Published on

விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று தேனி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மனுஜ் ஷியாம் சங்கர் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 69 நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இதில் 45 நிறுவனங்களில் விடுமுறை அளிக்காத முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காந்தி ஜெயந்தி விடுமுறை போன்ற அரசு பொது விடுமுறை நாட்களில் பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறையோ அளிக்க வேண்டும். தவறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ் ஷியாம் சங்கர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com