

சட்டப்படி ஆட்சி அமைக்க தவெகவை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் கூறியதாவது: சட்டப்படி ஆளுநர் செயல்படுவார் என்று காத்திருக்கிறோம். அதன் பிறகே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். காவல்துறை பாதுகாப்பு வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டதால் திரும்ப பெறப்பட்டது.
விஜய் முதல்வராவதை மொத்த தமிழ்நாடும் விரும்புகிறது. அவரை முதல்வராக்க மக்கள் வாக்களித்தனர். விசிக, கம்யூனிஸ்ட், ஐயுஎம்.எல். இடம் ஆதரவை கேட்டுள்ளோம். அவர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அனைவருக்கும் ஆட்சியில் பங்கு தரப்படும் என்பதே தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாடு. தேசிய ஜனநாயக கூட்டணி எந்த கட்சியின் ஆதரவையும் தவெக கோரவில்லை” என்று கூறினார்.