“மதுரை விமானநிலைய விழாவுக்கு அழைப்பு இல்லை”-சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு

மதுரை விமான நிலையத்தை 'சர்வதேச விமான நிலையம்' என்று தரம் உயர்த்த கடந்த ஏழு ஆண்டுகளாக விடாப்பிடியாக போராடினோம் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
“மதுரை விமானநிலைய விழாவுக்கு அழைப்பு இல்லை”-சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு
Published on

மதுரை,

மதுரை மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மதுரை விமான நிலையத்தை 'சர்வதேச விமான நிலையம்' என்று தரம் உயர்த்த கடந்த ஏழு ஆண்டுகளாக விடாப்பிடியாக போராடினோம். அதனை முறைப்படி அறிவிக்கும் இன்றைய நிகழ்வுக்கான அழைப்பிதழில் எனது பெயரும், விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் பெயரும் இடம் பெறவில்லை.

மக்கள் பிரதிநிதிகளான எங்களை எவ்வாறு நடத்தினாலும், அதைவிட மக்களின் நலனும், மதுரையின் நலனுமே எங்களுக்கு முக்கியம். நிகழ்வில் நாங்கள் பங்கெடுப்போம். பாஜக அரசியலை எதிர்கொள்வது எங்களுக்கு புதிதல்ல. உரிமை மீறலை சந்திக்க அதிகாரிகள் தயாராகி கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com