மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை - மின்சார வாரியம் விளக்கம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை - மின்சார வாரியம் விளக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. அதில், எந்த நிலையிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தமிழக அரசு அனுமதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்மாற்றிகளை கொண்டு செல்வதற்கான செலவையும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்படுவதாகவும், மின்வாரிய செலவு தரவுகளில் உள்ள விலை, ஒப்பந்த புள்ளி நிர்ணயம் செய்யும் காலத்திற்கு ஏற்ப திருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுவதாகவும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 3 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கோப்புகளை பரிசீலத்ததில் நிறுவனங்கல் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள மின்சார வாரியம், நிறுவனங்கள் தந்த விலைப்புள்ளியை விட ரூ.50,000 வரை குறைப்பு செய்து தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com