கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம் அண்ணே... செல்லூர் ராஜூவால் அவையில் சிரிப்பலை

சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக செல்லூர் ராஜூ அவையில் பேசினார்.
கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம் அண்ணே... செல்லூர் ராஜூவால் அவையில் சிரிப்பலை
Published on

சென்னை,

சட்டபையில் இன்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பயணிகள் அவதிக்கு உள்ளாவது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், கிளாம்பாக்கம் என்பதற்கு பதில் கேளம்பாக்கம் என்று பேசினார். இதை கவனித்த அவர் அருகில் இருந்த சக உறுப்பினர்கள், அண்ணே, அது கிளாம்பாக்கம் என்றனர்.

இருப்பினும் அதை அவர் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், செல்லூர் ராஜூ அண்ணே, அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம். அண்ணனை (செல்லூர் ராஜூ) பார்த்தாலே எல்லோருக்கும், ஒட்டுமொத்த சபைக்கே மகிழ்ச்சியாக இருக்கும். ஆனந்தமாக சிரிப்பு வரும். உங்கள் மகிழ்ச்சி. எங்கள் மகிழ்ச்சி. அங்கே குழப்பம் இல்லை.,உங்களுக்கு தான் குழப்பம் இருக்கிறது. வேண்டுமானால் வாருங்கள், உங்களை அழைத்து செல்கிறேன் என்று சொல்ல அவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com