டாஸ்மாக் சரக்கில் 'கிக்' இல்லை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று துரைமுருகன் கூறினார்.
டாஸ்மாக் சரக்கில் 'கிக்' இல்லை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
Published on

சென்னை,

மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: உழைப்பவர்களின் அசதியை போக்க, அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. டாஸ்மாக் சரக்கில் 'கிக்' இல்லை. கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு சாப்ட் ட்ரிங்க் போல மாறிவிடுகிறது.

விட்டில் பூச்சி விளக்கில் விழுவது போல கள்ளச்சாரயத்தை நோக்கி சிலர் செல்கின்றனர். கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால், இதனை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகக்கூடிய அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேண்டாமா. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com