மகாவீர் ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது - சென்னை கலெக்டர் எச்சரிக்கை

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
மகாவீர் ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது - சென்னை கலெக்டர் எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

31.03.2026 (செவ்வாய் கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25ii(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 31.03.2026 (செவ்வாய் கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com