முககவசம் அணியாதவர்கள் மீது கருணை காட்டக்கூடாது; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

முககவசம் அணியாதவர்கள் மீது கருணை காட்டக்கூடாது என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
முககவசம் அணியாதவர்கள் மீது கருணை காட்டக்கூடாது; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முககவசம் அணியாதவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அது நல்ல கேள்வி. அருமையான யோசனை. கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைக்காதவர்களுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டப்பட வேண்டும்!

கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணியும்படி உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பிரதமரும், முதல்-அமைச்சரும் கூறுகின்றனர். விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியாகின்றன. நானும் அறிவுறுத்தி வருகிறேன். இவ்வளவுக்கு பிறகும் திருந்தாமல் செயல்படுவது குற்றம் அல்லவா?.

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 90 சதவீத மக்கள் முககவசம் அணிவதில்லை என்று ஆணையரே கூறுகிறார். அதன்பிறகும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்?. விதிகளை மதிக்காமல் கொரோனாவை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com