கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக ஏற்பட்ட கொரோனா தொற்றால் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய சிறப்புப் பெட்டி வழங்கப்படும் எனவும் ஐசிஎம் ஆர் வழிமுறைப்படி அறிகுறி இல்லாதவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com