பொதுப்பணித்துறையில் எந்த பணிகளுக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

‘பொதுப்பணித்துறையில் எந்த பணிகளுக்கும் கமிஷன் கொடுக்காமல் கட்டுமானங்களை தரமான முறையில் அமைக்க வேண்டும்’என்று ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உத்தரவிட்டார்.
ஆதவ் அர்ஜூனா
Published on

ஒப்பந்ததாரர்கள்

பொதுப்பணித்துறையில் புதிய திட்டப் பணிகள், ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் மற்றும் தரம் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமை தாங்கி பேசியதாவது:-

அரசு ஒப்பந்தப் பணிகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் பயமின்றி பணிகளை செய்யலாம். எவருக்கும் லஞ்சம், கமிஷன் தரவேண்டியதில்லை. ஆனால் கட்டுமானங்கள் தரமான முறையில் இருக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பணிகளையும் முடித்துக் கொடுக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்க விரும்பினால் அதற்கான இலவச அழைப்பு எண் அறிவிக்கப்படும்.

ஒப்பந்தபுள்ளி மற்றும் நிதி சார்ந்த நடைமுறைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒப்பந்தக்காரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பொதுப்பணித்துறை மாற்றியமைக்கப்படும். 1,500 கிலோ மீட்டர் இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com