ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய நுகர்வோர் அட்டை கிடையாது - சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய நுகர்வோர் அட்டை கிடையாது - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
Published on

நுகர்வோர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. தற்போது அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல, சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையை நவீன இணைய அமைப்பிற்கு ஏற்ப மேம்படுத்தி உள்ளது. இந்த இணைய வழி கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலமாக கட்டணம் செலுத்தலாம்.

மேலும், யு.பி.ஐ., கியூ-ஆர் குறியீடு மற்றும் பி.ஓ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி கட்டணம் செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதன் மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தெரிந்துகொண்டு, பணம் செலுத்தும் ரசீதை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இந்த ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாகும். எனவே, நுகர்வோர்களுக்கு வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிதாக நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையிலும் பணம் செலுத்தப்பட்டதற்கான எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com