தமிழக அரசு மீது யாரும் சாட்டையை சுழற்ற முடியாது; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

த.வெ.க. அரசு மீது யாரும் சாட்டையை சுழற்ற முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
செங்கோட்டையன்
செங்கோட்டையன்
Published on: 

கோவை விமானநிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது

முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பிரதமர் 2 முறை நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும், சிறந்த முதல்-அமைச்சர் என்றும், நேர்மையான ஆட்சியை நடத்தி வருபவர் என்றும் பாராட்டி யுள்ளார். தேர்தலில் வெற்றி பெற முடியாத செல்லூர் ராஜு போன்றவர்கள் வாய்கிழியப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

சரியாக இருக்காது

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் இயக்கத்தில் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இதுபோன்று விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மற் றொரு இயக்கத்தை இழிவுபடுத்திப்பேசுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற பேச்சுகளுக்குப் பதிலளிப்பது தற்போதைய சூழலில் நாகரிகமாக இருக்காது.நாகரிகமற்ற முறையில் பேசுபவர்களுக்கு எல்லாம் பதில் கூறுவது சரியாக இருக்காது.

சாட்டையை சுழற்ற முடியாது

தமிழக அரசின் மீது யாரும் சாட்டையைச் சுழற்ற முடியாது. இந்த இயக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்கம். 2 ஆளும் கட்சிகளையும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த இயக்கம் இது. சட்டமன்ற வரலாற்றில் என்ன நடைபெற்றது என்பது இதுபோன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏதாவது விமர்சனம் செய்து பத்திரிகைகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்கள்.

மக்கள் ஏன் மாற்றினார்கள்

சட்டம் ஒழுங்கு குறித்து தி.மு.க.வினர் பேசினால் பல்வேறு கருத்துகளைக் கூற முடியும். தி.மு.க. ஆட்சியை மக்கள் ஏன் மாற்றினார்கள் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். சிறந்த ஆட்சியை வழங்கியிருந்தால் ஏன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்கள். அதேபோல், சிறந்த ஆட்சியை வழங்குவதாக கூறும் அ.தி.மு.க. ஏன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது என்பதற்கும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X