திமுகவை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது: உதயநிதி ஸ்டாலின்

திமுகவை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது என்று திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுகவை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது: உதயநிதி ஸ்டாலின்
Published on

வேலூர்,

வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பார் கருணாநிதி.. இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது.இப்போது திமுகவில் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.. நான் இப்போது வேலூர் வந்த போதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக இது இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும். நாம் கடந்த 2021இல் நடந்த சட்டசபையில் அடிமைகளை விரட்டி அடித்தோம். அதேபோல அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடிமையின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com