திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: பெரம்பூரில் விஜய் ஆவேச பேச்சு

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என விஜய் பேசினார்.
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: பெரம்பூரில் விஜய் ஆவேச பேச்சு
Published on

சென்னை,

தவெக தலைவரும் நடிகருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அந்த தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விஜய் பேசியதாவது:

தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும் நாம தொடங்கலாம். ஆனாலும் வீட்டு வாசலில் இருந்து தொடங்குவது என்று இருக்குல்ல.. அதுதானே பிரகாசமான ஒரு குறியீடாக இருக்கும். அதனால்தான் உங்க விஜய், நம்ம பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரசாரம் தொடங்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன். பெண்கள் பாதுகாப்பு இல்லாத, , சட்டம் ஒழுங்கு சரியில்லாத தமிழ்நாட்டை காப்பாற்றனும். ஒரு பாட்டி வயசு இருப்பவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. இது என்ன நாடா இல்ல காடா..

5 வருடமாக போலீஸ் துறையை கையில் வைத்து இருக்கும் ஸ்டாலினால் ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு இந்த ஆட்சி. எதற்கு இந்த அதிகாரம். இந்த தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு உள்ளதா? திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. ஸ்டாலினுக்கு மக்கள் முக்கியம் இல்லை. அவருக்கும் இந்த திமுக அரசுக்கும் என்ன முக்கியம் தெரியுமா? குடும்பத்தோட சேர்ந்து கொள்ளை அடித்ததுதான் முக்கியம்.

நகராட்சி துறையில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி லஞ்சம் வாங்கி, தகுதியில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்க்ள். பணத்தை கொடுத்து எப்படியாவது ஜெயிக்கலாம் என நினைப்பாங்க.. எல்லாவற்றையும் வாங்கி கொள்ளுங்கள். அவர்கள் காதிலே விசிலை ஊதி அனுப்புங்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com