தவெக வாக்கு வங்கியை யாரும் 10 சதவீதக்கு குறைவாக சொல்லவில்லை - ஜி.கே.வாசன்

கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்.25ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
தவெக வாக்கு வங்கியை யாரும் 10 சதவீதக்கு குறைவாக சொல்லவில்லை - ஜி.கே.வாசன்
Published on

மதுரை,

மதுரையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தலுக்கான அடித்தள பணிகளை தொடங்கி உள்ளோம், அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கோவையில் 14ம் தேதி, சென்னையில் 17ம் தேதி, திருச்சியில் 19ம் தேதி ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எங்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்.25ம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விஜய் கட்சியின் வாக்கு சதவீதம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதவீதத்தை சொல்லி வருகிறார்கள், ஆனால் தவெக வாக்கு வங்கியை யாரும் 10 சதவீதக்கு குறைவாக சொல்லவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com