பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை... உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே - வைகோ

பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை... உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே - வைகோ
Published on

சென்னை,

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். அவருடன் தொடர்பில்தான் உள்ளோம். பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது' என்று கூறினார். பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, பழ.நெடுமாறனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வைகோ, தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்.

என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com