நெடுவாசல் பகுதியில் ஷேல் கேஸ், மீத்தேன் ஆகியவை தென்படவில்லை ஓ.என்.ஜி.சி. அதிகாரி

நெடுவாசல் பகுதியில் ஷேல் கேஸ், மீத்தேன் ஆகியவை தென்படவில்லை என ஓ.என்.ஜி.சி. அதிகாரி ராஜா கூறிஉள்ளார்.
நெடுவாசல் பகுதியில் ஷேல் கேஸ், மீத்தேன் ஆகியவை தென்படவில்லை ஓ.என்.ஜி.சி. அதிகாரி
Published on

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கடந்த 16-ந் தேதி முதல் சுற்றுவட்டார 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் அறவழியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதவிர ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள சில இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்கள் என பல தரப்பில் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர், திட்டம் கைவிடப்படும் வரையில் போராட்டம் என அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் நெடுவாசல் பகுதியில் ஷேல் கேஸ், மீத்தேன் ஆகியவை தென்படவில்லை என ஓ.என்.ஜி.சி அதிகாரி ராஜா கூறிஉள்ளார். ஓ.என்.ஜி.சி அதிகாரி ராஜா பேசுகையில், நெடுவாசல் பகுதியில் ஷேல் கேஸ், மீத்தேன் ஆகியவை தென்படவில்லை. நெடுவாசல் பகுதியில் கச்சா எண்ணெய் மட்டுமே இருப்பது 2009-ம் ஆண்டு உறுதிசெய்யப்பட்டது. 3 மாவட்டங்களில் 174 கிணறுகளில் இருந்து 800 டன் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 29 லட்சம் கியூபிக் மீட்டர் எரிவாயு எடுக்கப்படுகிறது. ஓ.என்.ஜி.சி.யால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகளில் சுற்றுச்சுழல் மாசு ஏற்படவில்லை.

கச்சா எண்ணெயை எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்பது தவறான புரியல் என கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com