வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர். வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்! - மு.க. ஸ்டாலின்

ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர். வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்! - மு.க. ஸ்டாலின்
Published on: 

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் -த.வெ.க.வுக்குக் கண்டனம் உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்!

முக்கியத் தீர்மானங்கள்

SIR-ஐ முழுமையாக இரத்து செய்க! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக! ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு! EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக!

SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்! மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, SIR ரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com