சீட்டும் இல்லை... காசும் இல்லை... - கமலஹாசன்

திமுக கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் அளிப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சீட்டும் இல்லை... காசும் இல்லை... - கமலஹாசன்
Published on

சென்னை,

2026 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை, திமுக கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் அளிப்பதாக கமலஹாசன் கூறியுள்ளார். இதனால் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்து பணம் கட்டிய பல நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கமலஹாசனின் மக்கள் நீதி மையம் விருப்பு மனு கட்டணமாக 60 பேரிடம் வசூலித்த 30 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியதால் அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எம்.எல்.ஏ சீட்டும், கொடுத்த காசும் கிடைக்காததால் நிர்வாகிகள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர் . திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மையம் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததுடன் 60 பேரிடமிருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்று விட்டது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com