தொடர் விடுமுறை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் அரசு போக்குவரத்து கழகம்

அரசு போக்குவரத்து கழகம், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது.
தொடர் விடுமுறை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் அரசு போக்குவரத்து கழகம்
Published on

திருச்சி,

ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை என தொடர் விடுமுறையையொட்டி, வெளியூர்களில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களையொட்டி திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com