வந்தே பாரத் ரெயிலில் அசைவ உணவு நிறுத்தம் ?

வந்தே பாரத் ரெயிலில் அவ்வபோது சேவை குறைபாடுகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
வந்தே பாரத் ரெயிலில் அசைவ உணவு நிறுத்தம் ?
Published on

சென்னை,

நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் வந்தே பாரத் ரெயில்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கப்படுவதும், உணவு சேவையில் குறைபாடுகள் தொடர்பாக சமூக வலைதளபேசப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வந்தே பாரத் ரெயிலில் உணவு திணிப்பு முறை என மலையாளர் எழுத்தாளர் பதிவால் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியது.

இந்தநிலையில், சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து, சென்னையிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு வந்தே பாரத்தில் செல்லும் பயணிகள் இது தொடர்பாகப் ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு ரெயில்வே அல்லது ஐஆர்சிடிசி தரப்பில் இது குறித்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐஆர்சிடிசி செயலி மூலம், பயணிகள் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, ஒரு பாப்அப் மெசேஜ் வருகிறது. அதில், மதியம் மற்றும் இரவு உணவுக்கு மட்டுமே அசைவ உணவை தேர்வு செய்துகொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்படுவதாகவும் பயணிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து உரிய விளக்கம் கொடுத்து, ரெயில் பயணிகளின் புகார்கள் மீது கவனம் செலுத்துமா ஐஆர்சிடிசி என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com