வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தனி அமைச்சகம் - பிரதமருக்கு வடசென்னை எம்.பி. மீண்டும் கடிதம்

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்ப நலன்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என கலாநிதி வீராசாமி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தனி அமைச்சகம் - பிரதமருக்கு வடசென்னை எம்.பி. மீண்டும் கடிதம்
Published on

சென்னை,

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'சுமார் 3.2 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், அவற்றில் பல லட்சம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணம் நமது அந்நிய செலாவணி கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகளுக்குச் சென்று வாழும் தமிழர்களின் நலன் காக்க ஒரு வாரியத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளார்.

எனவே அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்ப நலன்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் ' என பிரதமரிடம் கலாநிதி வீராசாமி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com