தாம்பரத்தில் ரெயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்


தாம்பரத்தில் ரெயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
x

தாம்பரம் ரெயில்வே பணிமனை அருகே தண்டவாளத்தில் இன்று மின்சார ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது.

சென்னை

சென்னை தாம்பரம், கடற்கரை இடையே புறநகர் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான முறை புறநகர் ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாம்பரம் ரெயில்வே பணிமனை அருகே தண்டவாளத்தில் இன்று மின்சார ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதிக்கு இன்று மது, கஞ்சா குடித்துவிட்டு போதையில் வந்த வடமாநில இளைஞன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரெயிலை ஓட்டிச் செல்ல முயன்றான்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படையினர் வடமாநில இளைஞனை சுற்று வளைத்து பிடித்தனர். மேலும், ரெயிலை ஓட்டிச் செல்ல மேற்கொண்ட முயற்சியையும் தடுத்து நிறுத்தினர்.

மது, கஞ்சா போதையில் இருந்த வடமாநில இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில வடமாநில இளைஞர்களையும் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story