கரூரில் பஸ் ஸ்டாண்ட் ஊழியரை தாக்கி பணம் பறித்த வடமாநில கும்பல் - பரவும் வீடியோவால் அதிர்ச்சி

கரூர் பேருந்து நிலைய பணியாளரை வடமாநில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி பணம் பறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on

கரூர்,

கரூர் பேருந்து நிலைய பணியாளரை வடமாநில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி பணம் பறித்த வீடியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் பேருந்து நிலையத்தில் புலியூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பேருந்து குறித்த தகவல் தெரிவிக்கும் நபராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பணி முடிந்து பேருந்தில் ஏறியபேது அங்கு வந்த வடமாநில கும்பல் இருக்கை தெடர்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டது.

ஒரு கட்டத்தில் செல்வராஜ் பேருந்தில் இருந்து இறங்கவே, விடாமல் துரத்தி வந்த வடமாநில கும்பல் செல்வராஜை சரமாரியாக தாக்கியது. இதுதெடர்பான வீடியே காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தன்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தையும், மேதிரத்தையும் வடமாநிலத்தவர் எடுத்துச் சென்றதாக செல்வராஜ் பேலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com