திருவள்ளூர் அருகே முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலி

திருவள்ளூர் அருகே முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலியானார்.
திருவள்ளூர் அருகே முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலி
Published on

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கீதா முண்டா (வயது 30) இவரது கணவர் அனுப்முண்டா மற்றும் அண்ணன் சுரேஷ் முண்டா (வயது 34) ஆகியோருடன் மணவாளநகர் அடுத்த கொப்பூர் கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தங்கி இருந்து கொப்பூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுரேஷ் முண்டா மது அருந்திவிட்டு வந்து கீதாமுண்டாவின் கணவர் அனுப்முண்டாவுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு சுரேஷ் முண்டா வீட்டின் முதல் தளத்தில் உள்ள கைப்பிடி சுவரில் போதையில் அமர்ந்திருந்த போது அங்கிருந்து நிலைத்தடுமாறறி அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து 108 ஆம்புலன்சில் வந்தவர்கள் சுரேஷ் முண்டாவை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் சுரேஷ்முண்டா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com