தமிழகம், புதுச்சேரியில் 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடக்கம்?

வருகிற 14-ந்தேதியின் பிற்பகுதியில், வட கடலோர தமிழகம் (சென்னை உள்பட) மற்றும் தென் கடலோர தமிழகம் ஆகிய பகுதிகளுக்கும் மழை பரவ அதிக வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடக்கம்?
Published on: 

சென்னை

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் தென் பகுதிகளில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் மற்றும் பருவநிலை ஆர்வலர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.

வடகிழக்கு பருவமழை

இதன்படி, வருகிற 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெளியிட்ட செய்தியில், வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு-மத்திய வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. டெல்டா மற்றும் தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் ஏற்கனவே கிழக்கு திசை காற்று வீசத்தொடங்கியுள்ளது. அக்டோபர் 14-ந்தேதி முதல் டெல்டா பகுதியில் படிப்படியாக மழைப்பொழிவு தொடங்கக்கூடும்.

மழை

வருகிற 14-ந்தேதியின் பிற்பகுதியில், வட கடலோர தமிழகம் (சென்னை உள்பட) மற்றும் தென் கடலோர தமிழகம் ஆகிய பகுதிகளுக்கும் மழை பரவ அதிக வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, அக்டோபர் 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே, நீண்ட நாட்களாக நீடித்த வெப்பம் மற்றும் கோடைக்கால சூழல், அத்துடன் இயல்புக்கும் குறைவான மழைப்பொழிவு நிலை ஆகியவை வருகிற 15-ந்தேதிக்குள் தமிழகத்திலிருந்து படிப்படியாக விலகக்கூடும் என அவர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com