வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: முதல்-அமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு:  முதல்-அமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
Published on

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்வது வழக்கம்.அந்தவகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று பகல் 12 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.

விஜய்

டெல்டா மற்றும் கடலோர மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, சுகாதாரத்துறை, மின் துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத் தில் ஆலோசிக்கப்படுகிறது.

நீர் நிலைகளை தூர்வாருதல்

பேரிடர் நிகழ்ந்தால் அதை சமாளிக்க தேவையான மீட்பு உபகரணங்கள் மற்றும் மீட்பு பணியாளர்களை தயார்நிலையில் வைத்தல், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்படும் இடங்களில் முன்கூட்டியே மீட்பு படையினரை பணி அமர்த்துதல், நிவாரண மையங்களில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை கள் வழங்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாருதல், ஆகாய தாமரை செடி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுப டுத்துதல், சேதம் அடைந்த மின்கம்பங்கள், மின்கோபுரங்களை உடடி யாக சீரமைத்தல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் இந்த ஆலோ சனை கூட்டத்தின் வாயிலாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com