வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு

பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு
Published on: 

சென்னை,

சென்னை அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 46 மெகாவாட் திறன் கொண்ட பிரமாண்ட தரவு மையத்தை அமைத்துள்ளது. இந்த தரவு மையம் சுமார் 4,900 சர்வர் ரேக்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தரவு மையத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று திறந்து வைத்தனர். சிங்கப்பூர் மரபுப்படி அன்னாசி பழங்களை உருட்டி விட்டு இந்த தரவு மையத்தை திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய், சிங்கப்பூர் துணை பிரதமர் ஆகியோர் தரவு மையத்தை சுற்றிப் பார்த்தனர்.

இதையடுத்து பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் கால்வாய் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். தொடர்ந்து பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.

​இந்த ஆய்வின் போது, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் உயர் அதிகாரிகளிடம் தூர்வாரும் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால்களைத் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மழைக்காலத்தில் எவ்வித சிரமமும் அடையாத வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com