

தஞ்சாவூர்,
அய்யம்பேட்டை பகுதியில் ஆட்கள் பற்றாக்குறையால் நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின் றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குறுவை நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதி யில் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாய கூலி தொழிலாளர்கள் போதிய அளவில் கிடைப்பதில்லை. மேலும் 125 நாள் வேலை திட்ட பணி தற்போது தொடங்கி இருப்பதால் அந்த பணிகளுக்கு தொழிலாளர்கள் சென்று விடுகின்றனர்.
நெல் நாற்றுகள் வளர்ந்து விட்ட நிலையில் ஆட்கள் பற்றாக்கு றையால் இப்பகுதியில் நடவு பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது அய்யம்பேட்டை பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, உள்ளூர் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக எப்படி நடவு பணி செய்வது என்று நினைத்திருந்தோம். நடவு பணியில் வடமாநில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடமாநில தொழிலாளர்களை வைத்து நடவு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு நாற்று பறிக்க, நடவு செய்ய ரூ.7 ஆயிரம் வரை செலவழித்து வந்த நிலையில் தற்போது வடமாநில தொழிலாளர்கள் ரூ.5 ஆயிரம் சம்பளத்திற்கு நாற்று பறித்தும், நடவு பணியிலும் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக செலவு குறைவதுடன், உரிய நேரத்தில் நடவு பணிகளும் நடக்கிறது என்றனர்.