சோதனை அல்ல, ஆய்வு: மின்சார வாரியம் விளக்கம்

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
சோதனை அல்ல, ஆய்வு: மின்சார வாரியம் விளக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

இன்று (25.02.2025) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். ஆகவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com