‘எல்லோராலும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


‘எல்லோராலும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கை, ஒரு காலத்திலும் வேறு எங்கும் போகாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடந்தது. மாநாட்டில் பேசிய விஜய், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். குறித்து பேசியிருந்தார். இந்த நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“எல்லோராலும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது, எல்லோராலும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது. உலகத்திற்கே ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு பேரறிஞர் அண்ணா தான். இது ஒரு தேர்தல் யுக்தி. வாக்குகளை பெறுவதற்காக அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்களின் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கம். அவர்தான் கட்சிக்கு முழுமையான சொந்தக்காரர். இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கை, ஒரு காலத்திலும் வேறு எங்கும் போகாது. எங்கள் தலைவர்களின் பெயர்களை சொல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. அவர்களை தவிர வேறு யாரையும் தலைவரகளாக ஏற்காமல், எங்கள் தலைவர்களை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி.

ஆனால் அது உங்களுக்கு வாக்குகளாக நிச்சயம் வராது. அதே போல் எம்.ஜி.ஆரின் தியாகம், உழைப்பு, திரைப்படங்கள் மூலம் அண்ணாவின் கொள்கைகளை கொண்டு போய் சேர்த்தது, இவற்றின் மூலம் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story