மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்

பாரதீய ஜனதா கட்சி சார்பில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி தேவர் நகரில் நடந்தது.
மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்
Published on

பாரதீய ஜனதா கட்சி சார்பில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி தேவர் நகரில் நடந்தது. விழாவுக்கு கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு கிழக்கு மாவட்ட தலைவரும், பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான நாகேந்திரன் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், போனா பென்சில் ஆகிய பொருட்களை வழங்கினார். மேலும் 2 பெண்களுக்கு முதியோர் உதவி தொகைக்கான சான்று வழங்கப்பட்டது. விழாவுக்கு பள்ளப்பட்டி தெற்கு தெரு கிளை தலைவர் பூச்சிமணி முன்னிலை வகித்தார். தேவர் நகர் கிளை தலைவர் செல்வம் வரவேற்றார். விழாவில் நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் செந்தாமரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் அழகுமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பாரதீய ஜனதா கட்சி பிரமுகர்கள் சிவா, குமரேசன், தவமணி, காசிநாதன், செந்தாமரைகண்ணன், அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com