கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
Published on

சென்னை,

2021-22 ஆம் கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை (ஆகஸ்ட் 23) முதல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பத்தை www.tngasapg.in மற்றும் www.tngasapg.org ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவு செய்யலாம் என்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதோர் கல்லூரி உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் 60 ரூபாயும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தாமல் பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போது என்று கல்லூரிக் கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com