ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்; ஆக்கிரமிப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பினர்.
ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்; ஆக்கிரமிப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதனையொட்டி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. இதனையடுத்து 130-வீடுகளை அகற்ற ரெயில்வே துறையினர் திட்டமிட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நிலையில், மேற்கண்ட இடத்தில் உள்ள வீடுகளுக்கு பதில் மாற்று இடத்தில் வருவாய்த்துறையினர் பட்டா அளித்திட வேண்டும் எனவும், அதுவரை ரெயில்வே நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட கூடாது எனக்கூறி பா.ம.க சார்பில் பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினர். மக்களின் அன்றாட நிகழ்வுகள் பாதிப்படையும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பட்டது.

இது தொடர்பாக மனு ஒன்றை பெற்றுக்கொண்ட கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com