செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னையில் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!
Published on

செங்கல்பட்டு,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் எண் - 9444272345, கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077, தொலைபேசி எண்கள் - 044 - 27427412, 27427414 என்ற எண்கள் மூலம் புகார்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com