இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

திருக்குவளை, தலைஞாயிறு, வேளாங்கண்ணி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை உதவி செயற்பொறியாளர் ராய்ஸ்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருக்குவளை, தலைஞாயிறு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் திருக்குவளை கடைத்தெரு, சமத்துவபுரம், கே.கே.நகர், மணக்குடி, வடுவூர், காடந்தேத்தி, வாட்டாகுடி, ஓரடியம்புலம், தலைஞாயிறு, வண்டல், பழையாற்றங்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கும், அதேபோல் வேளாங்கண்ணி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் வடக்கு மற்றும் தெற்கு பொய்கை நல்லூர், பறவை இ.சி.ஆர்.ரோடு, ரெட்டலடி, செருதூர், பி.ஆர்.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com