மீட்பு மற்றும் நிவாரண உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரண உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் அங்கே வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்கள் தொடர்பு கொள்ள சென்னை பெருநகர காவல் உதவி மையம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 23452359, 23452360, 23452361, 23452377, 23452437 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி மழைநீரை அகற்றுதல், மரங்களை வெட்டும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com