தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரம் வருமாறு:

*சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும்

*நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்

*இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும்

*செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்

*முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com