ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடம்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

நவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
 ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடம்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.02.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

மேலும், ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 2.82 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட H2S வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய IOT மூலம் செயல்படுத்தப்படும் தானியங்கி கழிவுநீர் உந்து நிலையத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 3.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, இறகுப்பந்து விளையாட்டுத்திடல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள புதிய நீருறிஞ்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் 11.37 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 29,514 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டத்தின் தரைத்தளத்தில் - வரவேற்பு கூடம், மின் தூக்கி வசதிகள், 15 இருசக்கரம் மற்றும் 14 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள்;

முதல் தளத்தில் - சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், வரவேற்பு கூடம், காவல் ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை,

எழுத்தர் அறை, ஆண்/பெண் கைதிகள் அறை, CCTNS கணினி அறை, ஆவணங்கள் வைப்பு அறை, ஆயுதக் கிடங்கு அறை, சொத்துகள் அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள்;

இரண்டாம் தளத்தில் - துணை ஆணையர் அலுவலகம், வரவேற்பு கூடம், ஓய்வறையுடன் கூடிய துணை ஆணையர் அறை, துணை ஆணையரின் உதவியாளர்கள் அறை, கூட்டரங்கம், உணவு அறை (Pantry), ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள்;

மூன்றாம் தளத்தில் - போக்குவரத்து காவல் நிலையம், வரவேற்பு கூடம், போக்குவரத்து ஆய்வாளர் அறை, போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை, பொழுதுபோக்கு கூடம், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான ஓய்வறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள்;

நான்காம் தளத்தில் - கொளத்தூர் சரக காவல் உதவி ஆணையாளர் அலுவலகம், மாவட்ட சைபர் குற்றப் பிரிவு - வரவேற்பு கூடம், உதவி ஆணையாளர் அறை, குற்றப்பிரிவு ஆய்வாளர் அறை, நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் அறை, தீவிர குற்றவாளிகள் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் அறை, இணைய வழி குற்றப் பிரிவு அறை, குற்றப் பிரிவு விசாரணை அறை, தலைமை காவலர், எழுத்தர் மற்றும் காவலர் அறை, கைதிகள் அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆய்வு செய்தல்,

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 2.82 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட H2S வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய IOT மூலம் செயல்படுத்தப்படும் தானியங்கி கழிவுநீர் உந்து நிலையத்தின் செயல்பாட்டினை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்,

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் பெருநகர சென்னை மாநகரட்சியின் மூலதன நிதியின் கீழ் 3.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 இலட்சம் லிட்டர் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நடைபாதை, இறகுப்பந்து விளையாட்டுத்திடல், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள புதிய நீருறிஞ்சி பூங்காவிற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com