

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் டாக்டர் டி.கே.பிரபு 3,667 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.