9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது
9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 370 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் , வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது . சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com