இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
Published on

சாத்தூர்

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதை தொடர்ந்து. அதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.36 லட்சம் கிடைத்தது. ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதனை தொடர்ந்து நேற்று 11 உண்டியல்கள், மற்றும் கால்நடை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கிடப்பட்டன. அதில் ரொக்கமாக ரூ.36 லட்சத்து 26 ஆயிரத்து 919-ம், தங்கம் 175 கிராம், வௌளி பொருட்கள் 395 கிராம் கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, அய்யப்ப சேவா சங்கம் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com