நெல்லை, தென்காசியில் மின்தடை புகார் எண்கள் அறிவிப்பு


நெல்லை, தென்காசியில் மின்தடை புகார் எண்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2025 11:08 AM (Updated: 8 Jun 2025 11:28 AM)
t-max-icont-min-icon

மின் சாதனங்களை தேவையான இடத்தில் தேவையான பொழுது மட்டும் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம்.

திருநெல்வேலி

அனைவரது இல்லங்களிலும், அலுவலகங்களிலும், மின் பாதுகாப்பு சாதனம் (RCD) அமைத்து நமது குடும்ப உறவுகளின் உயிர்களை பாதுகாப்போம். மின் சாதனங்களை தேவையான இடத்தில் தேவையான பொழுது மட்டும் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம். சூறைகாற்று, இடி, மின்னல், மழை, நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்சாதனங்கள், மரங்கள் அருகிலே அல்லது கீழே நிற்க வேண்டாம். மின்சாரம் சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP) திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 ஆகியவற்றை தொடர்பு கொண்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய மின்தடை புகார்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்கலாம் என்று திருநெல்வேலி மின் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story