நாகூரில் நுங்கு விற்பனை மும்முரம்

நாகூரில் சுட்டெரிக்கும் வெயிலால், நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
நாகூரில் நுங்கு விற்பனை மும்முரம்
Published on

நாகூர்:

நாகூரில் சுட்டெரிக்கும் வெயிலால், நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தினமும் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

நுங்கு விற்பனை

பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உடலுக்கு குளிர்ச்சியை தரும் பனை நுங்கை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் நாகூரில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நாகூரில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இது குறித்து நுங்கு வியாபாரி சரவணன் கூறுகையில், நுங்கு வாங்குவதற்காக கிழ்வேளூர், தேவூர், பனங்குடி, ஒக்கூர் ஆகிய ஊர்களுக்கு சென்று நுங்கு மொத்தமாக வாங்கிவந்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் மாலை நேரங்களில் நோன்பு திறப்பதற்கு நாகூர் தர்காவிற்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் அதிகளவில் நுங்கு வாங்கி செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com