நர்சு விஷம் குடித்து தற்கொலை

திருப்பத்தூர் அருகே நர்சு விஷம் குடித்து தற்கொலை
நர்சு விஷம் குடித்து தற்கொலை
Published on

திருப்பத்தூர் தாலுகா செவ்வத்தூர் கிராமத்தில் வசிப்பவர் கணபதி. இவரது மகள் துர்கா (வயது 21).

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

இவர் இன்று நெட்டப்பனூர் கவுண்டனூர் வட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அவரை உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com