செவிலியர்கள் போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்கள் போராட்டம்
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த 11 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க கோரி 10-க்கும் மேற்பட்ட செவிலியர்களும் நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com