சென்னையில் இந்திய உணவு கழகம் சார்பில் பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

சென்னையில் இந்திய உணவு கழகம் சார்பில் பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடந்தது.
சென்னையில் இந்திய உணவு கழகம் சார்பில் பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு
Published on

சென்னை,

சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் பிராந்திய அலுவலகம் சார்பில், குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களிடையே ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் பி-12 பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் புல்லாபுரத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

இந்திய உணவு கழகத்தின் உதவி பொதுமேலாளர் (தரக்கட்டுப்பாடு) சுமன் பாய் பட்டேல் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கீதா, மேலாளர்கள் ஜெய்சங்கர், மகாலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி உஷா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அாசியின் பயன் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பயனாளிகள் தங்கள் வழக்கமான உணவில் செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்துவதாக விருப்பம் தெரிவித்தனர். கூட்டத்தில் அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com