25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படாது -தமிழக அரசு சுற்றறிக்கை

25 குழந்தைகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படாது -தமிழக அரசு சுற்றறிக்கை
Published on

சென்னை

தமிழகம் முழுதும் 42 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையும் தனித்தனி சத்துணவுக் கூடங்கள் இயங்கிவரும் நிலையில் அவற்றை ஒரே மையமாக மாற்றி இயங்கச் செய்யவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் சத்துணவு அமைப்பாளர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதற்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூகநலத்துறை ஆணையர் அனுப்பியுள்ள அறிக்கையில், அந்த மையங்களில் கூடுதலாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களை காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் சத்துணவு அமைப்பாளர்களின் விருப்பத்தை பெற்று பணிமாற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசின் சுற்றறிக்கையை தொடர்ந்து சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com