சின்னபசங்க முன்னாடியெல்லாம் என்னை ...! கதறிய கிரிஜா.. 90 மாத்திரைகள் விழுங்கினார்...!

சின்னபசங்க முன்னாடியெல்லாம் என்னை அவமானபத்துறாங்க என்று கதறிய கிரிஜா 90 தூக்க மாத்திரைகள் விழுங்கி உள்ளார்.
சின்னபசங்க முன்னாடியெல்லாம் என்னை ...! கதறிய கிரிஜா.. 90 மாத்திரைகள் விழுங்கினார்...!
Published on

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொர்ணம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் அதேபேகுதியை சேர்ந்த கிரிஜா (வயது35) சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை குறைவாக உள்ளதாக அமைப்பாளர் கிரிஜா மற்றும் ஆசிரியர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிரிஜா பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு அறை கதவை பூட்டிக்கொண்டு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அவர் வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி விரைந்து சென்று சத்துணவு அமைப்பாளர் கிரிஜாவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கல்வித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிஜாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. கணவர் பெயர் கலைத்தென்றல். இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார்.

இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. கிரிஜா கடந்த 4 வருடங்களாக சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கிரிஜாவுக்கு கருத்து வேறுபாடு அடிக்கடி எழுந்து வந்துள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட முட்டையில் குறைந்து உள்ளதாக கூறி, கிரிஜாவை மாணவர்கள் முன்னிலையில், தலைமை ஆசிரியர் சாந்தி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறாராம்.

இது சம்பந்தமாகவே, கிரிஜாவுக்கு அளவுக்கு அதிகமான தெந்தரவும் தந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் மனமுடைந்துபோன கிரிஜா, பள்ளி சத்துணவு அறைக்குள்ளேயே தலைமை ஆசிரியை கண்டித்து தற்கெலைக்கு முயன்றுள்ளார்.

அதுவும் 90 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தன்னுடைய தற்கொலை முயற்சியை அவரே செல்போனில் வீடியே எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டு, அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இந்த வீடியோ பதிவில் கிரிஜா கூறியதாவது,

என் பெயர் கிரிஜா.சத்துணவு அமைப்பாளராக வேலை பார்க்கிறேன்.என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க.சின்ன பசங்க முன்னாடிலாம் அசிங்க படுத்துறாங்க.

ரொம்ப அவமானமா இருக்கு..என்னால முடியல..என் கொழந்தய பாத்துக்குங்க கலெக்டரம்மா.

ரொம்ப அவமான படுத்துறாங்க.. எங்கம்மா கிட்டயே கொழந்தய குடுத்திருந்து அவுங்கதான் வளத்தாங்க என்று சொல்லி கொண்டே மாத்திரைகளை வாயில் கொட்டுகிறார் கிரிஜா.

விசாரணை நடத்தி முடித்தால்தான் இது தொடர்பான விவரங்கள் மேலும் தெரியவரும்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com